எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது: விடையளிக்க போதிய நேரம் இருந்ததாகவும் மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி

Tuesday, March 20, 2018


பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. 

பொறியியல் படிப்புக்கு முக்கியமாக கருதப்படும் கணித தேர்வு சற்று கடினமாக இருந்ததால் இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ? என்ற அச்சம் மாணவ-மாணவிகள் மத்தியில் நிலவியது. இந்நிலையில், இயற்பியல் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வெழுதிய மாணவிகள் புனிதா, கவிநயா, காயத்ரி, திவ்யா, ஹேமலதா ஆகியோர் இயற்பியல் தேர்வு குறித்து கூறும்போது, “கணித தேர்வில் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டதால் இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன்தான் தேர்வுக்கூடத்துக்குச் சென்றோம். ஆனால், அவற்றுக்கு மாறாக தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. 1, 3, 5, 10 மதிப்பெண் கேள்விகள் அனைத்துப் பிரிவுகளிலும் கேள்விகள் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட பல வினாக்கள் தேர்வுக்கு வந்திருந்தன. விடையளிப்பதற்கு போதிய நேரம் இருந்தது” என்றனர்.“கணித தேர்வுடன் ஒப்பிடும்போது இயற்பியல் தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்தது. குறிப்பாக 10 மதிப்பெண் வினாக்கள் மிகவும்எளிதாக இருந்தது” என்று சூளைமேடு கில்டு நகர் டிஏவி மேல்நிலைப்பள்ளி மாணவி கரீனா தெரிவித்தார். பல்வேறு மையங்களில் தேர்வெழுதிய மாணவ-மாணவிகளும் இதே கருத்தை கூறினர். அதேபோல், நேற்று நடந்த பொருளாதார தேர்வும் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது என்று பெரும்பாலான மாணவ-மாணவிகள் கூறியிருப்பதால் 200-க்கு 200 மதிப்பெண் எடுக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுபோல, 200-க்கு195-க்கு மேல் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். இதனால், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப்மதிப்பெண் உயரலாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One