எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் : மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு

Wednesday, March 21, 2018

அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 60
பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்கடி அழகப்பா ஆகிய 3 மாநில பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்படுள்ளது.

இதேபோன்று ராமச்சந்திரா , தஞ்சை சாஸ்த்ரா, வேலூர் விஐடி, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை அமிர்த விஷ்வா உள்ளிட்ட நிகர் நிலை பல்கலைக்கழகத்திற்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்என் தனியார் கல்லுரிக்கும் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரத்தின் மூலம் புதிய கல்வித் திட்டத்தையும் திறன் மேம்பாட்டு படிப்புகளையும் ஆராய்ச்சி மையங்களையும் அந்த கல்வி நிறுவனங்களே சுயமாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One