எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தனது ஊதியத்தில் ஒரு பகுதியை மாணவர்கள் நலனுக்காக செலவிடும் அரசுப்பள்ளி ஆசிரியை

Tuesday, March 13, 2018



தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழிக்கு ஏற்ப பள்ளியில் தனக்கு அளிக்கப்படும் ஊதியத்திலேயே ஒரு பகுதியை, தனது மாணவர்கள் நலனுக்காக செலவழித்து வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் கீதா அவர்கள்...













நான் சாதித்தேன் ,நான் யார் தெரியுமா ,எனக்கு எல்லாம் தெரியும், நான் தான் எல்லாம் (நான்...நான்..நான்) என்பவர்கள் மத்தியில் முதன் முறையாக தன் கடமையை மட்டும் அல்லாமல் குழந்தைகளக்கு நல்ல பண்புகள் பழக்கவழக்கங்கள் கற்று கொடுத்து கொண்டு, மாணவர்கள் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு  தனது பணியை உண்மையாக நேசித்து வரும் ஆசிரியர் மதிப்பிற்குரிய  கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

 மாணவர்களுக்கு தினம் தினம் போட்டி வைத்து அவர்களை ஊக்குவித்து பரிசு வழங்குகின்றீர்கள்..நரிகுறவர் குழந்தைகள் கல்வியில் முன்னேற,அவர்கள் மொழியை கற்று கொண்டீர்கள், கருணை உண்டியல் திட்டம் மூலம் மாணவர்கள் தாங்கள் சேமித்த பணத்தில் பிறருக்கு உதவுகிறார், மாணவர்கள் தினந்தொறும் தாங்கள் செய்த நல்ல செயல்களை நோட்டில் எழுத வைத்து நல்ல செயல்கள் அதிகம் செய்யும் மாணவர்களை பாராட்டி பரிசு வருகிறார்...

ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வரும் மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

மாணவர்கள் பிறந்த நாளுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறார், மாணவர்கள் தேவைகளுக்காக பல கல்வி உபகரணங்கள் சொந்த செலவில் வாங்கி கொடுக்கிறார் ...

மாணவர்களுக்கு கைகழுவும் நல்ல பழகத்தை கற்று கொடுத்து, தினம் தினம் மாணவர்களை பாடம் சம்பந்தமாக விளையாட்டு போட்டிகள், ஒவியம் வரைதல் ,கட்டுரை போட்டிகள் வைத்து மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார்.

தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. என்பதை உங்களை போன்ற ஆசிரியர்களை பார்க்கும் பொழுது தான்  உணர முடிகின்றது...

10 comments

  1. Congrts Geetha.Really i proud of you and feel happiness

    ReplyDelete
  2. உங்களைப்போன்ற பல ஆசிரியர்களால் நமது ஆசிரியர் சமுதாயம் இன்னும் பல நூற்றாண்டுகள் பாராட்டுப்பெறும்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சேவைதொடரட்டும்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்!

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One