எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை புரிபவர்களாக இருக்க வேண்டும்" - கரூர் கலெக்டர் அட்வைஸ்!

Sunday, March 25, 2018


";அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை புரிபவர்களாக இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் சிறப்பான நினைவாற்றலை பெற்றிருக்க வேண்டும்"; என்று கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

கரூர் அட்லஸ் கலையரங்கில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, பியூட்சரைசுடு குளோபல் கமினிட்டி மற்றும் மைசோ கல்வி நிகழ்நிலை இணைந்து நடத்திய பள்ளி மாணவ, மாணவியரின் நினைவாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் கலந்துக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், ";பிறப்பில் அனைவரும் சமமான அறிவையே பெற்றிருக்கிறோம். அதனுடைய வளர்ச்சியை ஒவ்வொருவரும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளிப் பருவத்தில் நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.

Chartered wealth manager® USA ,Now in India, Top Banking JobAd American Academy of Financial MGMT.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தில் சாதனையாளர்களாக வரவேண்டும் என்பதே இதன் நோக்கம். அரசுப் பள்ளியில் படிக்கிறோம், நம்மால் முடியுமா என்ற அச்சம் கொள்ளகூடாது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறும்போது, கடந்த ஆண்டு படித்த புத்தகங்களை பாதுகாத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவைகளை படிக்க வேண்டும். அதன்மூலம் நினைவாற்றல் மேம்படுவதுடன், போட்டித் தேர்வுகளில் எளிதில் வெல்ல உதவியாக இருக்கும். தாய், தந்தையர் மற்றும் ஆசியர்களை மதிக்க கற்றுக்கொண்டால், வானம் வசப்படும். எதையும் சாதிக்கலாம்"; என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One