எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்துச்சு!" - பிள்ளைகளுக்கு பெற்றோரே கற்றுத் தந்த விளையாட்டு

Sunday, March 25, 2018


பிள்ளைகளுக்குப் பெற்றோரே கற்றுத் தந்த விளையாட்டு, பாண்டி ஆட்டம், தட்டாங்கல், பல்லாங்குழி,கிச்சுகிச்சு தாம்பாளம்,ஓடி பிடிச்சு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை அரசுப் பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களால் பராம்பரிய விளையாட்டுகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று(24.03.2018) நடைபெற்றது. பள்ளி  மேலாண்மைக் குழு என்பது மாணவர்களின் பெற்றோர்களும் கிராம பெரியவர்களும் உறுப்பினர்களாகக் கொண்டது. இவர்கள் தாங்கள் சிறுவயதில் சளைக்க..சளைக்க விளையாடித் தீர்த்த அதனை பழங்கால விளையாட்டுகளையும் ஞாபகம் வைத்து குழந்தைகளுக்கு   சொல்லிக் கொடுத்ததோடு, அவர்களோடு கலந்து தாங்களும் விளையாடி தங்களது அந்தக்கால 'இளஞ்சோட்டு'பிராயத்து நினைவுகளுக்குப் போய் திளைத்தார்கள்.

அந்த நினைவுகளையும் மாணவ,மாணவிகளுடன் கதையாகச் சொல்லி மகிழ்ந்தார்கள்.இவ்விழாவில் கலந்து கொண்டது குறித்து பள்ளி மேலாண்மக்ககுழு உறுப்பினர் அனிதா  கூறும்போது," இன்றைய குழந்தைகளுக்கு விளையாட்டு என்றாலே, சட்டுனு ஞாபகத்துகுகு வருகிறது வீடியோ செல்போன் கேம்ஸ்தான்.மைதானங்களிலும் தெருக்களிலும் ஓடியாடி விளையாடும்  விளையாட்டுகள் அவர்களுக்குத் தெரியவில்லை. வீடியோ கேம்ஸ்களால்  கோபம்,சுயநலம் ,வன்மம் தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் போய்விடுகிறது..ஆனால் நமது பராம்பரிய விளையாட்டுகளான ',ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சு' விளையாட்டும் பல்லாங்குழியும்  கணிதம் வளர்க்கும் சிந்தனையை எங்களுக்குக் கொடுத்தது. இன்னிக்கும் நாங்க மனகணக்குதான் போடுவோம்.

எதுக்கெடுத்தாலும் கால்குலேட்டரை எடுத்து, 'நொச்சு..நொச்சு'னு தட்டுகிறது கிடையாது. அதேமாதிரி,தட்டாங்கல் ( கல்லாங்காய்)ஒரே நேர் கோட்டில் கவனத்தையும் ,நொண்டி ஆட்டம் கால்களுக்கு வலிமையைத் தந்து அடிவயிறு விழாமலும் இருக்க உதவுகிறது.இது போன்ற பராம்பரிய  விளையாட்டுகள் இயற்கையோடு ஒன்றி குழந்தைகளின் அறிவு,திறமை, தைரியம்,உடல், மனவலிமை, சுயமுயற்சி, தன்னம்பிக்கை,குழு ஒற்றுமை போன்ற பல்வேறு நல்லபண்புகளை வளர்த்தது. இயற்கையாகவே  நம் உடலை வியர்க்க வைத்து ஆரோக்கியம் அளித்தது இந்தப் பாரம்பரிய  விளையாட்டுகள்தான்.

அதனை நாம் இந்தக்காலப் பிள்ளைகளுக்குக்கற்றுக்கொடுக்க மறந்து விட்டோம். அதனைப் போக்கும் நோக்கத்தோடு இந்தப்பள்ளியில் உள்ள பிள்ளைகளுக்கு அந்த விளையாட்டுகளை நாங்கள் இன்று முழுக்கக் கற்றுக்கொடுத்தோம்.அத்துடன் நாங்கள்  சிறுவயதில்  விளையாடிய  விளையாட்டுகளை  இதனை வருடங்கள்  கழித்து எனது குழந்தையோடும் ஊர் குழந்தைகளோடும் விளையாடியபோது, மனசுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One