எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பார்வை குறைபாடு குழந்தைகள் பயன்பெறும் செயலி அறிமுகம்

Friday, March 23, 2018

மதுரை:மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் பார்வை குறைபாடு,

சிறப்பு குழந்தைகள் பயன்பெறும் அலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து குறை பார்வை ஆலோசனை மைய தலைவர் டாக்டர் விஜயலட்சுமி கூறியதாவது: குணப்படுத்த முடியாத அளவில் உள்ள குறைபாடுகளை களையும் நோக்கத்துடன் குறை பார்வை ஆலோசனை மையம் 1999ல் துவக்கப்பட்டது.
ஆண்டுக்கு 6,000 பேருக்கு இம்மையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. பார்வை குறைபாட்டை துவக்கத்திலேயே கண்டறிவதால் குணப்படுத்த முடியும். பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் 'டிக்னிபைவ்' மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் 'விகாஸ்' எனும் அலைபேசி செயலிகள் வெளியிடப்பட்டுள்ளது.
பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் பயன்படுத்தும் 'ப்ரெய்லி' வடிவ புத்தகங்களும், ஒலி புத்தகங்களும் சில அசவுகரியங்களை கொண்டுள்ளன. இவற்றை களைய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'மைன்ட் ட்ரீ' எனும் அறக்கட்டளையுடன் இணைந்து தீர்வு காணப்பட்டுள்ளது, என்றார்.
டாக்டர்கள் ரவீந்திரன், சாஹித்யா, ராமநாதன் பி.ஆர்.ஓ., மைய நிர்வாகிகள் ரோஸ்டோ ராவணன், ஆப்ரஹாம் மோசஸ், மாணிக்கவேலு, தொழில்நுட்ப நிபுணர் புளோரா ஜான், பயிற்சியாளர் வெங்கடேசன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One