எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Phontic English Unit 4

Monday, March 19, 2018


கேளம்பாக்கம் to மகாபலிபுரம் பாதையில் உள்ளது சூலேரிக்காட்டுக் குப்பம் என்ற ஊர்.படப்பிடிப்பு நடக்கும் பள்ளிக்கும் கடலுக்கும் 100 அடி இடைவெளி தான்.ஒரு டீ கடை கூட கிடையாது. சின்ன பெட்டிக் கடை தான் எங்களுக்கு சூப்பர் மார்க்கெட். 9 மணிக்கெல்லாம் காலை ஆசிரியர்களும்,மாணவர்களும் வந்து விட வேண்டும்.எல்லா ஆசிரியர்களுக்கும் வீட்டில் பள்ளி வயதுக் குழந்தைகள் தான்.அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத,இரக்கமில்லாத இயக்குநர் தனது தொழில்நுட்ப கலைஞர்களோடு 9.30 மணிக்கு வேலையைத் தொடங்கி விடுவார்.

அறையைக் கூட்டி சுத்தம் செய்து,10000 வாட்ஸ் வெளிச்ச வெப்பத்தில் shooting ஆரம்பிக்கும்.ஒரு சன்னல் கூட இல்லாத பூட்டப்பட்ட அறை.A.C மூன்று மாதம் கழித்து தான் கிடைத்தது.இருந்தாலும் செம வெட்கை.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே ஓடி வந்து முகம் கழுவியே ஆக வேண்டும்.
கடலோரமானதால்
அவ்வளவு வேர்வை.

சின்னச் சின்ன விஷயங்களில் கூட தவறானால் compromiseஏ கிடையாது.Re take தான்.ஒருவர் ஒரு dialogue கூட mistake செய்யக் கூடாது. ஒரு தப்பு செய்தாலும் எல்லாரும் பழைய positionலில் உட்கார வேண்டும். விக்கல்,இருமல் கூடாது.கொட்டாவி விடக் கூடாது. முன்னதான takeல் எப்படி உட்கார்ந்திருந்தார்களோ break விட்டு வந்தாலும் continuity miss ஆகாமல் மீண்டும் அப்படியே அமர வேண்டும்.ஒரே unitன் activity 2 மாதம் கழித்து எடுக்கப்பட்டால் முன்னர் என்ன costumes இருந்ததோ அதே தான் அணிந்து வர வேண்டும். தோடு,வளையல் கூட மாறக் கூடாது.

நீங்கள் DVD யில் கவனித்துப் பார்த்தால் தெரியும்.ஒரு unit ல் இருக்கும் seating arrangements அடுத்த unitல் இருக்காது.Background கூட பாடத்திற்கு ஏற்றவாறு தொலைவில் இருக்கும்.ஒவ்வொரு shot ற்கும் light, camera வேற ஆன்ங்கிள் மாற்ற வேண்டும்.set light ஐ on & off செய்ய வேண்டும்.shade விழுகக் கூடாது.கரும்பலகையில் எழுதும்போது உடலின் பின் புறம் தெரியக்கூடாது.side மட்டுமே தெரிய வேண்டும்.குழந்தைகளுக்கு ஒரு shot கூட உறுத்தாத வகையில் எடுக்க அதிக சிரத்தை எடுக்கப்பட்டது.

என்னடா...build up தூக்கலா இருக்குன்னு நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வரியும்,ஒவ்வொரு வலியும் உண்மை.ஆறு மாதங்கள் இந்த சித்ரவதை தான்.எந்தவித ஊக்க ஊதியமும் கிடையாது. சொந்தக் காசில் தான் பயணம்,சாப்பாடு,பவுடர் எல்லாமே.இந்தத் தியாகம் யாருக்கு வரும்.ஒரே ஒரு வரி எடுக்க அரை நாள் ஆன tension நிறைய உண்டு.

எல்லோரும் இடைநிலை ஆசிரியர்கள் தான்.ஒவ்வொரு உச்சரிப்பையும் துல்லியமாகச் சொல்ல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்.நடிகர்கள் இல்லை தான்.ஆனால் action சொன்னவுடன் சிரிக்க வேண்டும்,நடிக்க வேண்டும், மற்றவர்கள் சிரித்து விடாமல்.

உங்களைப் போன்ற,உங்களில் ஒருவர் போல இருக்கும் இந்த ஆசிரியர்களின் வியர்வையும்,தியாகமும் தான் இந்த DVD.

பிரதிபலன் எதிர்பாராமல் பிறவிப்பயன் எனக் கருதிய இந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கும்,வணக்கத்துக்குமுரியவர்கள்.

இதற்கு கைம்மாறாக ஆசிரிய சமுதாயம் நாம் என்ன செய்யப் போகிறோம்.ஆங்கில அட்சயமான இந்த phonetic DVD எல்லோருக்கும் போய்ச் சேர வழி செய்ய வேண்டும்.face book,what's app எல்லாவற்றிலும் Share செய்யுங்கள். இதைப் பற்றியே ஒரு 43 நாட்கள் முதலில் எல்லோரும் அறியச் செய்வோம்.தனியார் பள்ளிகளை விட நிச்சயம் அரசுப்பள்ளிகளின் தரம் உயரும்.Dear teachers Pls share and subscribe.

நல்லது நடக்கட்டும்.நன்மைகள் தொடரட்டும்.நாலாவது அத்தியாயம் தொடங்கட்டும்.

அன்புடன்
அமலன் ஜெரோம்
படப்பதிவு இயக்குநர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One