எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

2லட்சம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீராக பெற்ற அரசுப் பள்ளி

Tuesday, April 17, 2018


ஊர்கூடி கல்விச் சீர் திருவிழா -நந்திமங்கலம், மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக 2லட்சம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீராக பெற்ற அரசுப் பள்ளி,  கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது நந்திமங்கலம் ஊ.ஒ.ந.நி.பள்ளி , பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய  நிலை மக்களைக் கொண்டது  நந்திமங்கலம்,இவ்வூர் மக்களின் பெரும்பாலானோர் செங்கல் சூளையில்  வேலை பார்ப்பவர்களாகவும் , விவசாய வேலை பார்ப்பவர்களாகவும்,தினக்கூலிகளாகவும் உள்ளனர் ,இப்படிப்பட்ட ஏழை மாணவர்களைக் கொண்ட இப்பள்ளி இன்று இப்பள்ளியின் ஆசிரியர்கள் திரு .சத்யசீலன் மற்றும் அஜய் ஆகிய இருவர்களின் தனிப்பட்ட முயற்சியினால்,தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும்,முகநூல் நண்பர்களின் உதவியுடனும்,ஊர் மக்களின் ஒத்துழைப்புடனும்  2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீராக இப்பள்ளிக்கு பெற்றுத்தந்துள்ளனர்,இந்நிகழ்வு மெட்ரிக் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது,பல பெற்றோர்கள் இந்த வருடம் இப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை  சேர்ப்போம் எனக் கூறியுள்ளனர்








No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One