எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு பகுதி வினாக்கள் கடினம் மாணவ-மாணவிகள் கருத்து

Tuesday, April 3, 2018

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் 

தேதி தொடங்கியது. ஒவ்வொரு தேர்வுக்கும் 
மாணவர்கள் தயாராகுவதற்காக இடைவெளி 
விடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. 
இதுவரை நடைபெற்று முடிந்த தேர்வுகளில் 
கணிதம் பாடத்தேர்வு கடினமாகவும், 
இயற்பியல் தேர்வு எளிதாகவும், வேதியியல் 
தேர்வு சற்று கடினமாகவும் கேட்கப்பட்டு 
இருந்ததாக ஏற்கனவே மாணவர்கள் 
தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் உயிரியல், வரலாறு, 
தாவரவியல், வணிக கணிதம் ஆகிய 
பாடப்பிரிவுகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 
இந்த தேர்வை எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் 
ஆர்வமுடன் தேர்வு அறைக்கு வந்தனர். காலை 10 
மணிக்கு தொடங்கிய இந்த தேர்வுகள் பிற்பகல் 
1.15 மணிக்கு முடிந்தன.

தேர்வு முடித்து வெளியே வந்த மாணவ-மாணவிகளிடம் 
உயிரியல் தேர்வு குறித்து விசாரித்த போது, அதில் 
விலங்கியல் பிரிவு வினாத்தாள் கடினமாக 
கேட்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தனர். 
இதுகுறித்து மாணவ-மாணவிகள் சிலர் கூறியதாவது:-

உயிரியல் தேர்வில் தாவரவியல் பாடப்பிரிவு பகுதி 
எப்போதும் போலவே எளிதாக கேட்கப்பட்டு இருந்தது. 
ஆனால் விலங்கியல் பாடப்பிரிவு பகுதியில் 
கேட்கப்பட்டு இருந்த வினாக்கள் கடினமாகவே 
இருந்தன. 10 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் 
புத்தகத்தின் பின்புறத்தில் கேட்கப்படும் வினாக்களில் 
இருந்து எடுக்கப்படவில்லை. மாறாக அந்த கேள்விகள் 
சுற்றி வளைத்து கேட்கப்பட்டு இருந்தன. அதற்கு 
யோசித்து தான் பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘
உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு 
பகுதியில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள் 
நேரடியாக கேட்காமல், சுற்றி வளைத்து 
கேட்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே 
அரையாண்டு தேர்வில் இதேபோல் வினாக்கள் 
கேட்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 
போட்டித்தேர்வில் எப்படி கேள்விகள் கேட்பார்களோ? 
அதே மாதிரியான வினாக்கள் இந்த தேர்வில் 
கேட்கப்பட்டு இருந்தன’ என்றனர்.

நேற்று நடைபெற்ற உயிரியல், தாவரவியல், 
வரலாறு மற்றும் வணிக கணித தேர்வில் காப்பி 
அடித்ததாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு
 மாணவரும், திருச்சியில் 2 மாணவர்களும், 
விழுப்புரத்தில் 10 தனித்தேர்வர்கள் உள்பட 11 
மாணவர்களும் என மொத்தம் 14 மாணவர்கள் 
பிடிபட்டதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிளஸ்-2 தேர்வில் சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை 
தேர்வு செய்திருந்த மாணவர்களுக்கு தேர்வு முடிந்து 
இருக்கிறது. அதாவது, கணிதம், இயற்பியல், 
வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை தேர்வு 
செய்த மாணவர்களுக்கும், இயற்பியல், வேதியியல், 
உயிரியல், விலங்கியல் பாடப்பிரிவுகளை தேர்வு 
செய்த மாணவர்களுக்கும், வணிகவியல், 
கணக்கு பதிவியல், பொருளாதாரம், வரலாறு 
பாடப்பிரிவுகளை தேர்வு செய்த மாணவர்களுக்கும் 
நேற்றுடன் தேர்வு முடிந்துள்ளன.

வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்ற பாடப்பிரிவுகளை 
தேர்வு செய்த மாணவர்களுக்கு தேர்வு நிறைவடைகிறது. 
அன்றைய தினம் தொடர்பியல் ஆங்கிலம், 
இந்திய கலாசாரம், கணினி அறிவியல், 
உயிரி வேதியியல், சிறப்பு தமிழ் தேர்வு நடைபெறுகிறது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One