எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் - வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

Thursday, April 19, 2018


உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் நிறுவனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.


புதுடெல்லி:

ஹூவாய் நிறுவனத்தின் 2018 சர்வதேச அனலிஸ்ட் நிகழ்வு ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

அந்த வகையில் 2019-ம் ஆண்டு 5ஜி சந்தை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் 2019 மூன்றாவது காலாண்டு வாக்கில் ஹூவாய் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

ஹூவாய் சமீபத்தில் அறிமுகம் செய்த மேட் 20 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹூவாய் மேட் 30 அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனத்தின் சொந்த 5ஜி மோடெம் பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஹூவாய் நிறுவனம் தனது பலொங் 5G01 சிப்செட்-ஐ சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த சிப்செட் 2.3 Gbps அளவு பேன்ட்வித் வழங்கு்ம திறன் கொண்டதாகும். புதிய பலொங் சிப்செட் அளவை வைத்து பார்க்கும் போது இவை மொபைல் ஹாட்ஸ்பாட், தானியங்கி கார்களில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் மொபைல் போன்களுக்கென பிரத்யேக 5ஜி மோடெம் ஒன்றை ஹூவாய் உருவாக்கி வருகிறது. இத்துடன் முழுமையான 5ஜி சேவையை வழங்கவும் ஹூவாய் திட்டமிட்டுள்ளது. நுகர்வோருக்கு 5ஜி வன்பொருள் தயாரானதும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உபகரணங்களை வழங்கும் என கூறப்படுகிறது.

2025-ம் ஆண்டு வாக்கில் சுமார் 110 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என்றும் 20 கோடி இணைக்கப்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கும் என ஹூவாய் எதிர்பார்க்கிறது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One