எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு ஊழியர்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறையில் வெளிநாடு செல்லலாம்; மத்திய அமைச்சகம் தகவல்

Monday, April 16, 2018

அரசு ஊழியர்கள் குழந்தைகள் பராமரிப்பு விடுமுறையின்பொழுது வெளிநாட்டிற்கு செல்லலாம் என அரசு அதிகாரிகளுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
று துறைகளில் இருந்து குழந்தைகள் பராமரிப்பு விடுமுறை பற்றி வந்த பரிந்துரைகளை அடுத்து அரசு அதிகாரிகளுக்கான அமைச்சகம் புதிய வழிகாட்டி முறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், குழந்தைகள் பராமரிப்பு விடுமுறையில் இருக்கும் ஊழியர் ஒருவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு துறை அதிகாரிகளின் முறையான ஒப்புதலை முன்பே பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அவர்கள் இந்த காலத்தில் விடுமுறை பயண சலுகையும் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் தங்கள் முழு பணி காலத்தில், விதிகளின்படி, அதிக அளவாக 2 வருடங்கள் வரை (730 நாட்கள்) குழந்தைகள் பராமரிப்பு விடுமுறை எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குழந்தைகள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்றால் இந்த விடுமுறை அனுமதிக்கப்படாது என விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One