எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்! தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

Friday, April 20, 2018

தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை, ஆண்டுதோறும் சரிந்து கொண்டே வருகிறது.மாணவர் சேர்க்கை நடத்தாத பள்ளிகள், தற்காலிகமாக மூடப்படுகிறது. சேர்க்கை குறையும் பள்ளிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், செலவினங்கள் குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகள், இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழல் ஏற்படாமல் இருக்க, மாணவர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 'ஜூரோ என்ரொல்மெண்ட்' எனப்படும் புதிய சேர்க்கையேஇல்லாத நிலையை,உருவாக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறைந்தபட்சம் ஒன்றாம் வகுப்பில், 20 மாணவர்களாவது சேர்க்க வேண்டும். அரசின் திட்டங்கள், பாடத்திட்ட மாற்றம், கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றங்களை விளக்கி, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்களுடன் இணைந்து, அரசுப்பள்ளியை மக்களின்பள்ளியாக மாற்ற, ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ்1 வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாறுகிறது. துவக்க வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாறுவதால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகமாகலாம். வரும்மே 2ம் தேதி முதல், சேர்க்கை பணிகள் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'புதிய சேர்க்கை இல்லாத பட்சத்தில், உரிய காரணம் விளக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, புதுமையான வழிமுறைகளில் பெற்றோரை அணுக திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One