எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தும் அரசு பள்ளி.

Saturday, April 7, 2018


தமிழ்நாட்டிலே முதன் முதலாக மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தும் அரசு பள்ளி...அன்னவாசல்,ஏப்.7:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தும் திட்டம் குறித்து அப்பகுதி மக்கள் பெருமையாக பேசுகிறார்கள்...இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டி நம்மிடம் கூறியதாவது: தனியார் பள்ளியை விட சிறந்த பள்ளியாக இப்பள்ளியை மாற்ற பெங்களூரைச் சேர்ந்த ஜஸ்டின் அலங்காரம் டாக்டர் பிரியாஜஸ்டின் அலங்காரம் தம்பதினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..அதில் ஒரு திட்டம் தான் நன்றாக படிக்கும்  மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கி ஊக்கப் படுத்தும் திட்டம் ஆகும்...


இத்திட்டத்தின் படி ஐந்தாம் வகுப்பில் முதலிடம் பிடிப்பவருக்கு 10 ஆயிரமும்,இரண்டாமிடம் பிடிப்பவருக்கு ஐந்தாயிரமும் மூன்றாமிடம் பிடிப்பவருக்கு 3 ஆயிரமும் ரொக்கம் கொண்ட பத்திரம் வழங்கப்படும்..நான்காம் வகுப்பில் முதல் இரண்டு இடம் பிடிப்பவர்களுக்கு 5 ஆயிரம், 3 ஆயிரமும்,மூன்றாம் வகுப்பில் முதல் இரண்டு இடம் பிடிப்பவர்களுக்கு 4 ஆயிரம், 2 ஆயிரத்து ஐநூறும்,இரண்டாம் வகுப்பில் முதல் இரண்டு இடம் பிடிப்பவர்களுக்கு 3 ஆயிரம் ,2 ஆயிரமும்,முதல் வகுப்பில்  இரண்டு இடம் பிடிப்பவர்களுக்கு இரண்டாயிரம்,ஆயிரத்திற்கான பத்திரம் வழங்கி வருகிறார்கள்..



மேலும் ஒவ்வொரு வகுப்பிலும்  நன்றாக செயல்படும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கேடயமும் ,பதக்கமும் வழங்கி வருகிறோம்..இவ்வாறு ஊக்கப்படுத்துவதால் மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு படிக்கிறார்கள்..தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளமுயற்சி மேற்கொள்கிறார்கள்..பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை தானாக முன் வந்து குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்கிறார்கள் மேலும் படைப்போம் பசுமை கிராமம் என்ற திட்டத்தை நவம்பரில் 400 மரக்கன்றுகள் கிராம மக்களுக்கு கொடுத்து நட்டு பராமரிக்க சொல்லி இருந்தோம்..அவ்வாறு மரம் நட்டு பராமரித்தவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் 10 நபர்களை தேர்ந்தெடுத்து தங்க மூக்குத்தி பரிசு வழங்கினோம்..






கிராம மக்களுக்கும் பள்ளிக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு வேண்டும் என்ற வகையில் ஆண்டு விழாவையொட்டி பொதுமக்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு  பித்தளை குத்து விளக்கு,குங்குமச்சிமிழ்,எண்ணெய் விளக்கும் வழங்கினோம்..போட்டியில் கலந்து கொண்டவர்களும் மனம் ஆறுதல் அடைய என்ற நோக்கத்தில் அவர்களுக்கும் சில்வர் பிளேட் வழங்கி கௌரவப்படுத்தினோம்...எங்களது பள்ளியல் மேல் அக்கறை கொண்ட கிராம மக்களும் தங்கள் சொந்த செலவில் பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்விச் சீராக நாற்காலி,டியூப்லைட்,சமையல் பாத்திரங்கள்,தரைவிரிப்பான்கள் வழங்கி எங்களை நெகிழ்ச்சியடைய செய்து விட்டனர்..மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் மாதம் முதல் வாரம் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்..ஆனால்  எம் பள்ளியிலோ ஆண்டு விழாவன்றே  பள்ளி மேலாண்மைக் குழுவினர் அவ்வூரில் உள்ள ஐந்து வயதிற்கு மேற்பட்ட இருபது குழந்தைகளுக்கு மாலை அணிவித்து அவர்களை வைத்து ஊரைச் சுற்றி வந்து பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்து அசத்தி விட்டனர்..தனியார் பள்ளியை விட அனைத்து வகையிலும் அரசுப் பள்ளிகள்  சிறந்து விழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் செயல்படுவதாகவும் அதற்கு மேலூர் கிராம மக்களும் ,கல்வித்துறை அதிகாரிகளும் மிகுந்த ஒத்துழைப்பு தருவதால் தன்னால் இவ்வளவு சிறப்பாக செயல்பட முடிகிறது என்றார்..விழாவில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துணை காவல் துணைக் கண்காளிப்பாளர் ஆறுமுகம் பேசியதாவது: இது அரசு பள்ளியா ,தனியார் பள்ளியா என வியக்கும் வகையில் உள்ளது..நான் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை வரை அரசுப் பள்ளி,கல்லூரிகளில்  தான் பயின்று வந்துள்ளேன்..இப்பள்ளி மாணவர்கள் அணிந்துள்ள சீரூடையை பார்க்கும் போது இது தமிழ்நாடா,வடநாடா என வியக்கும் படி உள்ளது..இவ்வூர் கிராம மக்களோ பள்ளிக்கு என்ன தேவை என்பதை குறிப்பறிந்து பள்ளிக்குச் சீர் கொண்டு வந்துள்ள செயல் பாராட்டுக்குரியது..மேலும் கிராமத்தில் இருந்து நகரப் பள்ளிகளிலே மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் விரும்புவார்கள்..ஆனால் இங்கோ புதுக்கோட்டை நகரத்தில் இருந்து மேலூர் கிராம்ப் பள்ளியில் ஆங்கில வழியில் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள் என்பதன் மூலம் அரசுப் பள்ளியின் தரம் உயர்ந்து வருவதை அறிய முடிகிறது..அரசு பள்ளியில் படித்த எந்த மாணவரும் சோடை போனதில்லை..எனவே இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை மட்டும் அல்லாது உறவினர் குழந்தைகளையும் சேர்த்திட வேண்டும் என்றார்..விழாவில்அன்னவாசல் ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் அரு.பொன்னழகு,கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சீனி.இராமச்சந்திரன்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராசு,கல்வியாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார்,வழக்கறிஞர்ஜவகர்,மருத்துவர் யாழினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்...விழாவில் பள்ளியின் சார்பில் நடைபெற்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சியானது காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது...முடிவில் பள்ளியின் சார்பில் வந்திருந்த அனைவருக்கும்  அறுசுவை விருந்து அளித்து அசத்தி விட்டனர்...கிராம மக்களோ மாணவர்களுக்கு தேவையான பரிசுப் பொருட்கள் ,ஒலி ஒளி அமைப்பு,மேடை அலங்காரம்,புகைப்படம் மற்றும் வீடியோ செலவு,நடன அமைப்பு என அனைத்தையும் ஏற்று தங்களது ஊர்த்திருவிழா போல் நடத்தி வந்திருந்த அனைவரையும் இது ஆண்டுவிழாவா அல்லது ஊர்த்திருவிழாவா என நினைக்கும் படி வியப்பில் ஆழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.. கட்டுரை..கு.முனியசாமிM.A,B.Ed,ஆசிரியர்..உருவம்பட்டி..அன்னவாசல் ஒன்றியம்..

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One