எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மணிகண்டம் இடைமலைப்பட்டி புதூர் பள்ளியில் பரிசு மழை!

Monday, April 16, 2018



நன்றி நவிழும் நல்ல தருணம்.
பள்ளி ஆண்டுவிழா பாங்குற நடைபெற பங்களித்தோர், பாசம் காட்டியோர், வேர்களாய் நின்று வியர்வை சிந்தியோர், கலைநிகழ்வுகள் சிறக்கக் கரங்கொடுத்தோர்,என ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல ஒரு யுகம் போதாது!....முதலில்
ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகளில் .....................கலந்துக்கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் பரிசுப்பொருளை வழங்கிய பள்ளியின் முன்னாள் கல்விக்குழுத்தலைவர் ............திரு முத்து செல்வம் அவர்களுக்கு நன்றி ..... ஆண்டுவிழா எம் பள்ளியில்
அழகாக நடந்தேறியது
வாண்டுகளாம் பிள்ளைகள்
வகைவகையாய் கலைகளை
வழங்கி எமை அசத்தினார்கள்!நீண்டநேரம் நடைபெற்ற
நிறைவான பல நிகழ்வுகள்
யாண்டும் நிலைத்திருக்கும்
யாவருடைய நினைவினிலும். !
இருநூறுக்கும் மேற்பட்ட
இனிய எம் பிள்ளைகள்
இணைந்து அசத்தினர்
இமைமூடாது பார்த்தோம்
மான்களாய் சிலர் துள்ள
மயில்களாய் சிலர் ஆட
குயில்களாய் பலர் பாட
அடடா!கலை நிகழ்வுகள் அருமையோ அருமை!போங்கள்!
விழிகளுக்கும் செவிகளுக்கும்
விருந்தளித்த மலர்களை
வெறுங்கையால் அனுப்பலாமா?
சீர்தந்தப் பெற்றோரின்
சீராளப் பிள்ளைகட்கு
சிறுபரிசேனும் வழங்குதல் முறையன்றோ,சிந்தையிலே நினைத்தபோது வந்தது அதற்கும் உதவி
ஆடியோர் பாடியோர்
அழகாக நடித்தோர்
பேசியோர் உரை வீசியோர் என ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு பரிசென
உணவுப் பேழையொன்று
வழங்கினர் எம் கொடையாளர்
வணங்கினோம் உளமாற.
வருமாண்டில் உணவெடுத்து வருவார்கள் அதிலே.
இருநூறு மாணவரும் இன்புற்ற மனதுடனே.
பரிசளிக்கப் பங்களித்த பாசமுள்ள நெஞ்சங்களைப் பாராட்ட மொழியில்லை.
இடைமலைப்பட்டிப் புதூர் பள்ளியில்
இணைந்தாலே போதும்
கல்வியோடு கைநிறையப் பரிசும் பெறலாம் என்பதை என்பித்த  எங்களன்புகொடையாளர்கள் எந்நாளும் வாழ்க வாழ்க.......
வாழ்த்துவோம் .... வாருங்கள் .
நன்றி நவிழும் நல்ல தருணம் தொடரும் .....

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One