எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நீட் தேர்வில் இந்த ஆண்டு மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுவர் : பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நம்பிக்கை

Wednesday, April 11, 2018

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக அளவில் மாணவ-மாணவிகள் வெற்றி பெறுவார்கள் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்தார்.


சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்ய பாமா பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கான பயிற்சி முகாமை தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியது: பிளஸ் 2 மாணவர்கள் நீட் தேர்வை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான பயிற்சியை அளிப்பதற்காக தமிழக அரசு சார்பில் 9 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்டத்துக்கான பயிற்சி மையம், சத்யபாமா பல்கலைகழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர், சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 12 மாவட்டங்களில் இருந்து 63 மாணவர்களும், 287 மாணவிகளும் இங்கு பயிற்சி பெறுகின்றனர் என்றார் அவர்.

இதன் பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்த ஆண்டு அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறந்த முறையில் நீட் தேர்வு பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படுகிறது.
எனவே இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மாணவ-மாணவிகள் வெற்றி பெறுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One