எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உலக சுகாதர தினம்: அனைத்து குடிமக்களுக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்வோம்!

Saturday, April 7, 2018


உலகம் முழுவதும் இன்று(ஏப்ரல்-7) உலக சுகாதார தினம் கடைபிடிப்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆரம்ப நாளான ஏப்ரல் 7-ஆம் தேதி, உலக ஆரோக்கிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளைக்கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு, 'உலகளாவிய சுகாதார பாதுகாப்பு' என்ற கருத்தின் அடிப்படையில், இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதருக்கும் சுகாதார பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

சுகாதாரத்தில் தன்னிறைவு பெறாத இந்தியா!

இந்திய மக்களின் பொது சுகாதாரம் என்பது மிக மோசமான நிலைமையில் இருப்பதை `வாட்டர் எய்ட்’ என்கிற தன்னார்வ அமைப்பு, உலக வங்கி ஆய்வுகள் வெளிக் கொண்டு வந்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் சுமார் 56 சதவீத மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதி இல்லை.

இந்தியாவில் உள்ள நீர் நிலைகளில் சுமார் 70 சதவீத தண்ணீர் மக்கள் நேரடியாக பயன்படுத்த உகந்ததாக இல்லை. ஆனால் இங்குள்ள ஏழைகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் அன்றாட தேவைகளுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்றும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

குறிப்பாக, இந்தியாவில் 70 சதவீத கிராமப்புற மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்கிறது உலக வங்கி ஆய்வு. மேலும் அனைவருக்குமான கழிப்பறை வசதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான கழிப்பறை வசதிகளின் நிலைமை இன்னும் மோசம் என்று விவரிக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளிலும் இந்தியா பின் தங்கியுள்ளது.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சுற்றுப்புற சுகாதாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசாங்கங்கள் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.


உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம்!

இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதன்மூலம், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதிக்கான காப்பீடு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 50 கோடி மக்கள் பயனடைவார்கள் என கருதப்படுகிறது. இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, உலகின் எப்பகுதியிலும் இருக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் வருமான அளவு,சமூக நிலை, பால், சாதி அல்லது மத வேறுபாடின்றி சுகாதாரப் பராமரிப்பைப் பெற, சமமான வாய்ப்பை உறுதி செய்ய இந்த உலக சுகாதார நாளில் உறுதியேற்போம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One