எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: கல்வித்துறை அமைச்சர், செயலரிடம் ஜாக்டோ-ஜியோ மனு

Thursday, April 12, 2018

ஜாக்டோ-ஜியோ
 அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு பல கட்ட போராட்டத்தை நடத்தி வந்தனர். இது குறித்து  அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கடந்த ஜனவரியில் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ நடத்தியது. ஆனால் அரசுத் தரப்பில்  இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.

இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி தமிழகத்தில் 77 இடங்களில் தொடங்க உள்ளது. அந்த மையங்களின் முன்பு  இன்று கருப்பு பேட்ஜ்  அணிந்து கோரிக்கை முழக்க போராட்டம் நடத்துவது, 24ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து மறியல் போராட்டம் நடத்துவது  அதற்கு பிறகு தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என்றும் ஜாக்டோ-ஜியோ முடிவு செய்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு எடுத்துள்ள இந்த முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர்  பிரதீப்யாதவ் ஆகியோருக்கு மனுவாக கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One