எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது!!!

Sunday, May 27, 2018


சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்).சூரியன்,புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது.

சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.இந்த நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சூரியனின்  சுற்றுப்புற தட்ப வெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதற்கு தகுந்தாற் போன்று வெப்பத்தை தாங்க கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்படும். அது  ஜூலை 31 ம் தேதி சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசாவின் பார்கர் சூரிய ஆய்வு விண்கலம்(NASA's Parker Solar Probe) அனுப்புகிறது இது 11 லட்சம்  மனிதர்களின் பெயர்களை தாங்கி செல்கிறது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஏழு வருட பணி முடிவில், சூரியனின் வளிமண்டலத்தில்  எந்த விண்கலமும் இதற்கு முன்னர் சென்றதை  விட இந்த ஆய்வில் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தும்.

"பார்கர் சூரிய ஆய்வின் மூலம் சூரியன் பற்றிய நமது புரிதலை இன்னும் அதிகமாக்கும், ஒரே நட்சத்திரத்தை நாம் நெருங்கிப் படிக்க முடியும்.  மேலும் இந்த விண்கலம் பல லடசம் மக்களின்  பெயர்களை சுமந்து செல்கிறது. யுனெஸ்கோவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தில் பார்கர் சோலார் ஆய்வு  திட்ட விஞ்ஞானி  நிக்கோலா ஃபாக்ஸ் கூறி  உள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில், ஒரு நட்சத்திரத்தை  தொடுவதற்கு மக்கள்  தங்கள் பெயர்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டனர். 2 மாதங்களில் மொத்தம் 1,137,202 பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டு  உள்ளது உறுதி செய்யப்பட்டன.

மே 18 அன்று விண்கலத்தில் பெயர்கள் கொண்ட மெமரி கார்டு பொருத்தப்பட்டது.  திட்டமிட்டபடி  ஜூலை 31 ம் தேதி  விண்கலம் ஏவப்படும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One