எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரம்

Wednesday, May 16, 2018

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின்றன. முடிவுகள் வெளியான 5 நிமிஷத்தில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்களின் பெற்றோர் செல்லிடப்பேசி எண்களுக்கு அனுப்பி வைக்கும் வசதியை தேர்வுத் துறை செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைந்தது.
இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 6,903 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதினர்.
அதிகபட்சமாக அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 47 ஆயிரத்து 664 பேர் எழுதினர். தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி 77 மையங்களில் தொடங்கி மே மாதம் முதல் வாரத்தில் நிறைவு பெற்றது.
இதையடுத்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா மையத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் போது, மாநிலத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை தனியாக வெளியிடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, முதல் 3 இடங்கள் ரத்து செய்யப்பட்டு, கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதே நடைமுறையின் கீழ் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளியிடும் நாளில் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று முடிவுகளை அறிந்து கொள்ள வசதியாக மதிப்பெண் பட்டியல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு பள்ளிகளில் ஒட்டப்பட்டன.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
பள்ளிகளுக்கு: அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் குறித்த பட்டியல்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய், ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படும்.
அந்தந்த பள்ளிகள் அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ன்ள்ங்ழ் ஐஈ, ல்ஹள்ள்ஜ்ர்ழ்க் ஆகியவற்றை பயன்படுத்தி ஆன்லைன் வழியாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
காலை 9.30 மணி அளவில் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரில் சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியான 5 நிமிஷம் முதல் 10 நிமிஷங்களில் அந்தந்த மாணவர்களின் பெற்றோர் செல்லிடப்பேசி எண்ணுக்கு மதிப்பெண்ணுடன் கூடிய முடிவு வந்து சேரும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One