எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

800 அரசுத் தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

Tuesday, May 22, 2018

மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்ட தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 800 அரசுத் தொடக்க பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
10 மாணவர்களுக்கு குறைவாகப் படிக்கும் அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்படும் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்துக்கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 800 பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது. 800 பள்ளிகளை மூடுவது பற்றிய அரசாணை ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் எண்ணிக்கை குறைந்தது ஏன்?:
கல்வி உரிமைச் சட்டம் காரணமாக தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் மூலம் வரும் ஆண்டில் 1.25 லட்சம் பேர் தனியார் பள்ளியில் சேரக்கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் சங்கம் கண்டனம்:
800 தொடக்க பள்ளிகளை மூடும் அரசின் முடிவுக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே அரசுப்பள்ளிகள் மூடப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அரசுத் தொடக்க பள்ளிகளை மூடும் முடிவை கைவிடுமாறு ஜக்டா நிர்வாகி இளமாறன் கூறியுள்ளார்.  

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One