எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இன்று நீட் தேர்வில் முக்கிய விதிமுறை தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு : காலை 9.30க்கு பின் நுழைய தடை

Sunday, May 6, 2018


சென்னை: நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் தேர்வில் ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண்  குறைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசுகளின் பாடத்திட்டங்களை  கணக்கில் எடுத்துக்ெகாள்ளப்பட்டு வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம்  ஒரு மணி வரை தேர்வு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு பின் வரும் மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆங்கிலத்தில்  நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே நீட் வினாத்தாள் வழங்கப்படும்.

மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு குறிப்பிட்ட மாநில மொழி, ஆங்கிலம் என இருமொழிகளில் வினாக்கள்  அச்சிடப்பட்ட வினாத்தாள் வழங்கப்படும். இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் தலா 45 கேள்விகள், உயிரியல்(தாவரவியல், விலங்கியல்)-90  கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் மொத்தம் 720 மதிப்பெண்கள். ஓஎம்ஆர் சீட்டில் ஒவ்வொரு விடைக்கான  இடத்தில் முழுமையாக ஷேட் செய்ய வேண்டும்.

மாணவர்களின் விடைத்தாள் கம்ப்யூட்டர் மூலமே திருத்தப்படும் என்பதால் முழுமையாக ஷேட் செய்திருந்தால் மட்டுமே அது விடையளித்ததாக  கணக்கில் எடுத்துக்ெகாள்ளப்படும். மாணவர்கள் சிபிஎஸ்இ வழங்கும் பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு  தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.  ஒரே கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடை அளித்திருந்தாலோ அது தவறான விடையாக  கருதப்பட்டு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். அதனால் விடையளிக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். விடை தெரியாத  கேள்விகளுக்கு பதிலளிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

நீட் தேர்வில் கடந்த ஆண்டு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி பொதுப்பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும்,  இதரபிரிவினர், மாற்றுத்திறனாளிகள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 2017ம் ஆண்டு  பொதுப்பிரிவினர் 720க்கு 360 மதிப்பெண்களும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் - 324 மதிப்பெண்களும், இதரபிரிவினர், இதரபிரிவு  மாற்றுத்திறனாளிகள் - 288 மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு மாணவர்கள் பெறும்  மதிப்பெண்களை பொறுத்து இந்த தேர்ச்சி விகிதம் மாறுபடலாம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One