எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

Tuesday, May 15, 2018


மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் ஆகியோர் பணியினை தொடங்கி வைத்து ஆய்வு.             தமிழகம் முழுவதும் பள்ளித்திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்   வழங்கிடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அதன்படி  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் ஜூன் மாதம் 1ந்தேதி( வெள்ளிக்கிழமை) பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் கிடைத்திடும் வகையில் லாரிகள் மூலமாக ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் அனுப்பும் பணி புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் இன்று15-05-2018(செவ்வாய்கிழமை) தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி இரா.வனஜா,புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை லாரிகளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பும் பணியினை தொடங்கி வைத்து பணியினை ஆய்வு செய்தனர்.இவ்வாறு லாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பும் பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து தலைமையாசிரியர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி.பழனிவேலு,புதுக்கோட்டை மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் திரு வி.ஆர்.ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் லாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு வரும் பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை பெற்று ஜூன் 1ந்தேதி பள்ளி திறந்த நாளன்றே மாணவர்களுக்கு வழங்கி அன்றே கற்றல்,கற்பித்தல் செயல்பாடுகளை தொடங்கவேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி இரா.வனஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One