எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ரெயில் டிக்கெட், உறுதி செய்யப்படுமா? - ரெயில்வே இணையதளமே இனி சொல்லி விடும்

Tuesday, May 29, 2018

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில்களில் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், தினந்தோறும் சுமார் 13 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

இதனால், பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் காத்திருக்கும் நிலை டிக்கெட்டுகளாகவும், ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகளாகவும் அமைகின்றன. அந்த டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள முடியாதநிலை இருந்தது.

இந்நிலையில், அத்தகைய டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து சொல்லி விடும். அதற்கேற்ப இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே தகவல் சேவை மையம் உருவாக்கிய புதிய தொழில்நுட்பத்தின்படி, முன்பதிவு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து, காத்திருக்கும் நிலையில் உள்ள டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை இணையதளம் யூகித்து சொல்லி விடும். இந்த புதிய முறை, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One