எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உடனே வழங்கப்பட வேண்டும்

Wednesday, May 9, 2018

தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தனியார் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு வழங்கும் , போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. 2017-18 -ஆம் கல்வியாண்டு முடியும் நிலையிலும், இதுவரை உதவித்தொகை வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
உதவித்தொகை வழங்கப்படாததால், தனியார் கல்லூரிகளில் பயிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், இல்லையென்றால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகத்தினர் கண்டிப்புடன் கூறி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கால், தனியார் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அரசு நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One