எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மரக்கன்று பராமரித்தால் மாணவர்களுக்கு, 'மார்க்

Monday, May 21, 2018

''மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, பராமரிப் போருக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம், அரசு பரிசீலனையில் உள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.
அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம்கோபியில், டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு நேற்று நடந்தது.ஒளிபரப்பை துவக்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய தாவது: கல்வியில் புரட்சி ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜூன் மாதத்தில் வழங்கப்படும் புத்தகத்தில், இதை உணரலாம். பாட புத்தக காகிதத்தின் தரம், 70 எம்.எம்., ஆக முன்பிருந்தது.

தற்போது, 80 எம்.எம்., அளவில், உறுதியாக தயாரிக்கப்பட்டுள்ளது. கறுப்பு, வெள்ளை நிறத்தை மாற்றி, பல வண்ணத்தில் உருவாக்கியுள்ளோம்.ஒரு குழந்தை, பிளஸ் 2 முடிக்கும் வரை, கல்விக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி காட்டுவோம். அதை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில், பி.இ., முடித்து விட்டு, 1.60 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர். பிளஸ் 2 முடித்தாலே, வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும், 'ஸ்கில் டிரெயினிங்' பயிற்சி அளிக்கப்படும்.தமிழகத்தில் பயிலும், 81 லட்சம் மாணவர்களுக்கு, தலா ஐந்து மரக்கன்று வழங்கப்படும். பராமரிக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கும் முறையை, அரசு பரிசீலித்து வருகிறது.

இத்திட்டத்தை அறிவித்தால், நாடே திரும்பி பார்க்கும். நடப்பாண்டில், அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள்கூடுதலாக சேர்வார்கள் என தெரிகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One