எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன

Saturday, May 19, 2018

கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ - மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக கலைக் கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்கள் குவிகின்றன.
தமிழகத்தில் சமீப காலமாக பொறியியல் படிப்புமீதான ஆர்வம் சற்று குறைந்து கலை அறிவியல் படிப்புகள் மீது மாணவர்களின் பார்வை திரும்பத் தொடங்கியுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 90,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. அதேநேரத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர். அந்த நிலை இந்த ஆண்டும் தொடர்கிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கிவிட்டது.

 ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, டிஜி வைஷ்ணவா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி,கிறிஸ்தவ மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரி, வள்ளியம்மாள் கல்லூரி உள்ளிட்ட ஒருசில கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்பங்கள் நேரில் வழங்கப்படுகின்றன.விண்ணப்பங்கள் நேரில் வழங்கப்படும் கல்லூரிகளில் மாணவர்கள், பெற்றோர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அரசு கல்லூரிகளான மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசு ஆண்கள் கலை கல்லூரி, வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியான கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியிலும் மாணவர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியை ஜெ.மஞ்சுளா கூறும்போது, “அரசு கலை கல்லூரிகளில் சேர பிளஸ் 2 தேர்வு முடிவு வருவதற்கு முன்பிருந்தே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து அடுத்த 10 வேலை நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வெவ்வேறு படிப்புகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் ஜுன் முதல் வாரத்தில் வெளியிடப்படும். கல்லூரிகளில் சேர மாணவர்களிடமிருந்து அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால் கடந்த ஆண்டைப் போன்று இடங்களை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One