எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஹெல்மெட் அணிந்தால்தான் டூவீலர் ஸ்டார்ட் ஆகும்! - அரசுப் பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

Friday, May 4, 2018


ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகும் வகையில் புதிய அமைப்பை கரூர் வெள்ளியணை அரசுப் பள்ளி மாணவர் சுகி உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்.

இன்றைய தேதியில் அதிக மரணம் வாகன விபத்துகளால்தான் ஏற்படுகிறது. அதுவும், ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் பாதுகாப்பற்ற நிலையால்தான், பலர் தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள். இதைத் தடுக்கும் பொருட்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தால்தான் வாகனம் ஸ்டார்ட் ஆகும் வகையில் ஓர் அசத்தல் கண்டுபிடிப்பைக் கண்டிபிடித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு ஏகப்பட்ட விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.



கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது வெள்ளியணை. இந்தக் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் சு.சுகி என்ற மாணவர். அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் தனபால் துணையோடு ஆர்வம் கொண்டுள்ளார். அந்த வகையில், இன்று சாலை விபத்துகளுக்கு அதிகம் காரணமாக இருக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் மனிதர்கள் இருப்பதைக் கணக்கில் கொண்டு, ஹெல்மெட் அணிந்தால்தான் வாகனம் இயங்கும் வகையில் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார். டி.வி ரிமோட் கன்ட்ரோலைக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். இந்த ஹெல்மெட்டை அணிந்த பிறகுதான், டூவீலர் சாவி துவாரம் அருகே லைட் எரிகிறது. அதைத் தொடர்ந்தே வண்டியை ஸ்டார்ட் செய்ய முடிகிறது. அதேபோல், ஹெல்மெட்டை அணிந்தால், தூக்கம் வருகிறது' என்று பலர் சொல்வதால், 'இந்தக் ஹெல்மெட்டை அணிந்து தூங்கினால், ஹெல்மெட்டுக்கு பீப் பீப் என்று சவுண்ட் எழுந்து, எச்சரிக்கை செய்கிறது. அதேபோல், குடித்துவிட்டு வண்டி ஓட்டினாலும் இந்த ஹெல்மெட் எச்சரிக்கை செய்கிறது. தவிர, வண்டி ஸ்டாண்டை எடுத்தால்தான், வண்டி இயங்கும் உள்ளிட்ட வசதிகளைத் தனது கண்டுபிடிப்பில் சேர்த்து சுகி அசத்தியுள்ளார்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய மாணவர் சு.சுகி, ``எங்க ஊர்லயே சிலர் ரோடு ஆக்ஸிடென்டுல ஹெல்மெட் அணியாமல் அடிபட்டு இறந்திருக்காங்க. அதைப் பார்த்த பிறகுதான் இப்படி ஒரு கண்டுபிடிப்பைக் கண்டறியனும்ன்னு தோணுச்சு. இதற்கு வழிகாட்டி ஆசிரியர் தனபால் உதவினார். அதனால்,ரிமோட் உள்ளிட்ட சில பொருள்களை வச்சு இதை உருவாக்கினேன். இந்தக் கண்டுபிடிப்பை வாகனங்களிலும், வாகன ஓட்டிகளும் சரியாகப் பயன்படுத்தச் சொன்னால்,100 சதவிகிதம் விபத்துகள் தவிர்க்கப்படும். இந்தக் கண்டுபிடிப்பு எனக்கு பல விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இதனால், வெளிநாடு போகும் யோகமும் ஏற்பட்டுள்ளது" என்றார் உற்சாகமாக.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One