எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

செயல்திறனுக்கு ஏற்ப இனி அரசு பள்ளிகளுக்குநிதி ஒதுக்கீடு

Sunday, May 27, 2018

நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளின் செயல்திறனுக்கு ஏற்ப இனி மத்திய அரசு நிதி கிடைக்க உள்ளது
*நடப்பு 2018-19-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

*இதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தங்கள்தேவைக்கு ஏற்ப கேட்கும் போது பிரித்து வழங்கப்படும். இந்த நிதியுடன் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

*ஏற்கெனவே அமலில் இருந்த சர்வ சிக் ஷா அபியான், ராஷ்ட்ரிய மாத்யமிக் சிக் ஷா அபியான் மற்றும் ஆசிரியர்கள் கல்வி திட்டம் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.*இந்த புதிய திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளின் மாணவர், ஆசிரியர் சதவிதம், மாணவர் தேர்ச்சி உள்ளிட்ட பள்ளியின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் பல்வேறு வகைசெயல்திறன்களின் அடிப்படையில் இந்தத் தொகை பிரித்துவழங்கப்பட உள்ளது. குறிப்பாக கிராமப்புற பள்ளிகள் இந்த திட்டத்தால் அதிகம் பலன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

*இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள்  கூறும்போது, “இதுபோன்ற புதிய திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பு, நாடு முழுவதிலும் உள்ள மாநில, யூனியன் பிரதேசஅரசுகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்

*ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. சிறந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டஇந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக பலன் கிடைக்கும்” என்றார்

*புதிய திட்டத்தின்படி எந்த செயல்திறனுக்கு எவ்வளவுதொகை ஒதுக்கப்படும் என்ற விவரம் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது

*உதாரணமாக நூலக வளர்ச்சிக்கு மாதம் ரூ.5000 முதல் ரூ.20,000, விளையாட்டுப் பயிற்சிக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட உள்ள இந்த விவரங்களை கண்டறிந்து அரசுப் பள்ளிகள் தங்கள் செயல்திறனை அதிகரிக்கலாம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One